உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கராத்தே பெல்ட் தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை

கராத்தே பெல்ட் தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை

குன்னுார்: குன்னுார் 'மவுண்டோ ஷிடோ-ரியு கராத்தே அகாடமி,' சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட சிறப்பு பயிற்சியாளர், 4வது டான் பிளாக் பெல்ட் கருணாகரன், மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்து, அர்ப்பணிப்புடனும் தொழில்முறை அணுகுமுறையுடனும் பெல்ட் தேர்வை நடத்தினார். 'வஜ்ரம் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் பெடரேஷன்,' மாவட்ட தலைவர் நெடுமாறன் பாராட்டி பேசினார். முன்னாள் ராணுவ வீரர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அகாடமி பயிற்சியாளர் உமாசங்கர் பேசுகையில்,''இன்றைய இளம் தலைமுறையினர் போதை பொருள் பழக்கம் போன்ற தீய பழக்கங்களில் இருந்து விலகி, ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கையுடன் வாழ கராத்தே பயிற்சியில் ஈடுபட முன் வர வேண்டும். உடல் வலிமை, மன உறுதி, சுயகட்டுப்பாடு, மரியாதை, நல்ல பண்புகளை வளர்க்கும் கராத்தே பயிற்சியை மேற்கொண்டு மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை