உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆக்ரோஷமாக விரட்டிய யானை; நுாலிழையில் தப்பிய பயணி

ஆக்ரோஷமாக விரட்டிய யானை; நுாலிழையில் தப்பிய பயணி

கூடலுார்; கூடலுார் - கோழிக்கோடு சாலையில் ஆக்ரோஷமாக விரட்டிய யானையிடம் இருந்து பைக்கில் வந்த கேரள சுற்றுலா பயணிநுாலிழையில் உயிர் தப்பினார். கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்தை ஒட்டிய கிராமம், நகர பகுதிகளில் முகாமிட்டு வரும் யானைகள், பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், கோழிக்கோடு சாலை வழியாக கூடலுார் நோக்கி பைக்கில் வந்துள்ளனர். பால்மேடு சாலையோரத்தில் நின்றிருந்த யானை ஆக்ரோஷமாக துரத்தியது. சுதாரித்து கொண்ட சுற்றுலா பயணி பைக்கை வேகமாக இயக்கி நுாலிழையில் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'யானைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க வன ஊழியர்கள், இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். பல உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வனத்துறை நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி