உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

ஊட்டி:'மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ், 3,293 பயனாளிகளுக்கு, 16.63 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.தொடர்ந்து, அரசு வழங்கிய உதவிகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், '2021 மே 7ம் தேதி முதல் இதுவரை, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், 1,676 பேர்; கடும் ஊனமுற்ற, 990 மாற்றுத் திறனாளிகள்; தசை சிதைவினால் பாதிக்கப்பட்ட, 45 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.மேலும், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்பட்ட, 27 மாற்றுத் திறனாளிகள்; சுய தொழில் தொடங்கும், 50 பேர்; திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், 6 பயனாளிகள்; கல்வி உதவித் தொகை பெற்ற, 259 பேர்; மின்களம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி உள்ள, 10 பேருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற்றத்துக்கு பின், மாவட்டத்தில் இதுவரை மொத்தம், 3,293 மாற்றுத் திறனாளிகளுக்கு, 16.63 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை