உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்; மாணவர்கள் பங்கேற்பு

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்; மாணவர்கள் பங்கேற்பு

கூடலுார்; மாநில அரசின் பொது சுகாதார நோய் தடுப்பு துறை; 'ஆல் தி சில்ட்ரன்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்; தோட்ட தொழிலாளர்கள் தொலைபேசி மையம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, துவங்கிய ஊர்வலத்துக்கு தொழில் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி தலைமை வகித்தார். கூடலூர் நகர சுகாதார மைய அலுவலர் அன்பு துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊர்வலம் பழைய கோர்ட் சாலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தேவர்சோலை சாலை வழியாக சென்று பயிற்சி மையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் செவிலியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ