உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாக்களிப்பதன் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

பந்தலுார்;பந்தலுார் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், 'ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாக உள்ளது ஓட்டு போடுவது; நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணவும், நல்ல தலைவர்களை தேர்வு செய்யவும் நமக்கு உரிமை தரப்பட்டுள்ளது. அதனை சரியாகவும், தவறாமலும் செய்ய வேண்டும். எனவே, வாக்காளர்கள் தவறாமல் தேர்தல் நாளன்று ஓட்டு போட வேண்டும்,' என்றார். வி.ஏ.ஓ. க்கள் அசோக்குமார், கர்ணன், உதவியாளர் சர்மிளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி