உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலையில் விலங்கு கணக்கெடுப்பு; வன ஊழியர்களுக்கு பயிற்சி

முதுமலையில் விலங்கு கணக்கெடுப்பு; வன ஊழியர்களுக்கு பயிற்சி

கூடலுார்; முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முதுமலை, மசினகுடி வன கோட்டத்துக்கு உட்பட்ட சீகூர், சிங்கார, நீலகிரி கிழக்கு வனச்சரகங்களில், பருவ மலைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று, துவங்கி 9ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்தது.வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின் போது, வன ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, வனச்சரகர்கள் பாலாஜி, தயானந்தன், தனபால் ஆகியோர் விளக்கினர். தொடர்ந்து, வனவிலங்குகள் கணக்கெடுப்பு, தாவர கணக்கெடுப்பு முறைகள் குறித்தும், கணக்கெடுப்பு விபரங்களை பதிவு செய்தல் குறித்தும் உயிரியலாளர்கள் பயிற்சி அளித்தனர். முகாமில், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'முதுமலை, மசினகுடி வன கோட்டத்துக்கு உட்பட்ட வன சரகங்களில், பருவ மழைக்கு பிந்தைய வன விலங்கு கணக்கெடுப்பு பணி வரும், 9ம் தேதி வரை நடக்கிறது. அதில், வன உயிரினங்களுடன் தாவரங்களின் கணக்கும் பதிவு செய்யப்படுவது சிறப்பம்சமாகும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ