உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அன்னமலை முருகன் கோவில் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு

அன்னமலை முருகன் கோவில் இளைய மடாதிபதி பொறுப்பேற்பு

மஞ்சூர்; மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் உள்ளது. கோவில் ஸ்தாபகர், மடாதிபதி ஸ்ரீ குரு கிருஷ்ணானந்தாஜி சுவாமியின் தெய்வீக ஒப்புதலுடன்,அடுத்த இளைய மடாதிபதியாக கீழ்குந்தாவை சேர்ந்த வடிவேல் சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டார். இவரின் பதவியேற்பு விழா அன்னமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் மண்டபத்தில் நடந்தது.அதில், ஸ்ரீ குரு கிருஷ்ணானந்தா ஜி சுவாமிக்கு வயது மூப்பு காரணமாக, ஆசிரம பணிகளை நிர்வகிக்க, இளைய மடாதிபதி நியமனம் செய்து, அவருக்கு தீட்சை அளிக்கப்பட்டது.புதிய இளைய மடாதிபதியான, வடிவேல் சுவாமிகள், ஸ்ரீ குரு கிருஷ்ணானந்தாஜி சுவாமிகளுக்கு பாத பூஜை செய்து பதவி ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் படுக தேச பார்ட்டி நிறுவனர் மஞ்சை மோகன், முக்கிய நிர்வாகிகள்,பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை