உள்ளூர் செய்திகள்

அன்னாபிேஷகம்

குன்னுார்; குன்னுார் விநாயகர் கோவில், ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.ஐப்பசிமாதம் பவுர்ணமி தினத்தன்று, சிவபெருமானுக்கு நடக்கும் அன்னாபிேஷக விழா, மாவட்டம் முழுவதும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, குன்னுார் விநாயகர் கோவில், ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவில்களில் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது. காலை முதல் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன. மாலையில், அன்னாபிேஷகம் நடந்தது. அதில், அன்னத்தாலான சிறப்பு அலங்காரத்தில், சிவபெருமான் பக்தர்களுக்கு அரும் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை