மேலும் செய்திகள்
சிறுமியை சீண்டியவர் மீது போக்சோ வழக்கு பதிவு
27-Jan-2025
ஊட்டி; ஊட்டி எப்பநாடு பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் ஆண்டு பூஜை நடந்தது.ஊட்டி அருகே, எப்பநாடு கிராமத்தின் மலை உச்சியில் பீரமுக்கு ஈஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஜன., மாதம் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. நடப்பாண்டுக்கான சிறப்பு பூஜை நடந்தது. இருளர் பழங்குடியினரின் இசையுடன் அழைத்து வரப்பட்ட ஈஸ்வரனை மலை உச்சியில் உள்ள கோவிலில், படுகர் இன மக்கள் மற்றும் இருளர் பழங்குடியினர் ஆடலும் பாடலுமாய் கொண்டாடி மகிழ்ந்தனர். காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் சுற்றுவட்டார படுகரின மக்கள்பங்கேற்று தரிசனம் செய்தனர். கோவில் திருவிழா நாளில் மட்டும் பொது மக்களுக்காக திறக்கப்படுகிறது.
27-Jan-2025