உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழந்தைகள் பாதுகாப்பு பணி தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் பாதுகாப்பு பணி தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊட்டி : குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு) பணி இடத்திற்கு மாத தொகுப்பூதியமாக, 27,804 ரூபாய் வழங்கப்படும்.இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், சமூகப்பணி, சமூகவியல்,குழந்தை மேம்பாடு, சமூக மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது சமூக பணி, சட்டம், பொது சுகாதாரம், சமூக மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும், பெண்கள் மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம்; பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கண்காணிப்பு மேற்பார்வையில் இரண்டு வருட அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் திறமை பெற்றிருக்க வேண்டும். 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு, மாத தொகுப்பூதியமாக, 18, 536 ரூபாய் வழங்கப்படும். சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தவிர, கம்ப்யூட்டரில் அனுபவத்துடன், 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவத்தை, www.nilgiris.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் அலுவலகம், அறை எண்-13, இரண்டாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிங்கர் போஸ்ட், ஊட்டி என்ற முகவரிக்கு, பிப்., 2ம் தேதியன்று மாலை, 5:30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 0423 -2445529 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை