நியமனம்
கோத்தகிரி: கோத்தகிரி ஒருங்கிணைந்த காங்., வட்டார தலைவராக, சில்லபாபு நியமிக்கப்பட்டுள்ளார். காங்., கட்சியில் இதுவரை கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி வட்டங்களில் தனித்தனியாக, இரு வட்டார தலைவர்கள் செயல்பட்டனர். சமீபத்தில் கட்சி தலைமை எடுத்த முடிவு படி, மறு சீரமைப்பு பணிகள் நடந்தன. இதில், கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி வட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதன்படி, கட்சி மாவட்ட தலைவர் பரிந்துரையின் படி, மாநில தலைவர் மாணிக் தாக்கூர் ஒப்புதலுடன், ஒருங்கிணைந்த கோத்தகிரி வட்டார தலைவராக சில்லபாபு நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட அவருக்கு, காங்., கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.