உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாய் கைலாஷில் ஆராதனை மகோற்சவம்

சாய் கைலாஷில் ஆராதனை மகோற்சவம்

குன்னுார் ;குன்னுார் எல்லநள்ளி, சாய் கைலாஷில் ஸ்ரீ சத்யசாய்பாபாவின் ஆராதனை மகோற்சவம் நடந்தது.சத்யசாய்பாபாவின் நினைவு தினத்தையொட்டி, புட்டபர்த்தி உட்பட உலகெங்கும் நேற்று சாய் பக்தர்கள் ஆராதனை மகோற்சவ வழிபாடு நடந்தது.அதன் ஒரு பகுதியாக, குன்னுார்-- ஊட்டி சாலை, எல்லநள்ளியில் 'சாய் கைலாஷ்' என, அழைக்கப்படும் ஸ்ரீ சத்யசாய் பாபா மந்திரில் நடந்த ஆராதனை மகோற்சவத்தில் நேற்று காலை, 10:00 மணிக்கு கொடியேற்றம், காலை, 11:00 மணிக்கு வேத பாராயணம், பஜனை, ஆகியவை நடந்தன. சிறப்பு நிகழ்ச்சியாக, 30 நாடுகளில் சாய் பஜனை நிகழ்ச்சிகளை நடத்திய, ஹைதராபாத் டாக்டர் சிவப்பிரசாத் கோமரவளு குழுவினரின் சாய் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றது.இவர் தனது சுவாசத்தை கட்டுப்படுத்தி, ஒரு மணி நேரம் விசில் சப்தமாக நாம சங்கீர்த்தன பக்தி பாடல்களை பாடியது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து, பிரார்த்தனை, அன்னதானம், நடந்தது. நீலகிரி மாவட்ட சத்ய சாய் சேவா சமிதி துணை தலைவர் தியாகராஜன், தலைமையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா சமிதி பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை