உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அக்னி வீரர்களுக்கு பயிற்சி ராணுவ கமாண்டர் ஆய்வு

அக்னி வீரர்களுக்கு பயிற்சி ராணுவ கமாண்டர் ஆய்வு

குன்னூர்: அக்னி வீரர்களுக்கான புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகளை, தென் மாநில ராணுவ கமாண்டிங் அலுவலர் கரண்பீர் சிங் ஆய்வு செய்தார்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு அக்னிவீரர்களுக்கு, அதிநவீன ட்ரோன் பயிற்சி ஆய்வகம் அமைத்து பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மையத்திற்கு வருகை தந்த லெப்டினென்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், புதிய தொழில் நுட்ப மையத்தை நேற்று ஆய்வு செய்தார். ஜூப்பா ஜியோ நேவிகேஷன் பிரைவேட் லிமிடெட் அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளித்தனர்.இது மட்டுமின்றி, அக்னி வீரர்கள் உடல் மேம்பாட்டிற்கான உயர் பயிற்சி உபகரணங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, பயிற்சி பட்டாலியன் ஆகியவற்றை பார்வையிட்டார்.முன்னதாக, ஆயுதப்படை அதிகாரிகளுக்காக, ஊட்டியில் புதுப்பிக்கப்பட்ட ரத்தன் டாடா ஹாலிடே ஹோமை திறந்து வைத்தார். மெட்ராஸ் சென்டர் கமாண்டர் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் உட்பட ராணுவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ