கொட்டாங்குச்சியில் கலை பொருள்; பெண்களுக்கு இலவச பயிற்சி
கூடலுார் : கொட்டாங்குச்சியில் கலை பொருட்கள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.நீலகிரி, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: கூடலுாரில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் உதவியுடன் பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. அதில், கொட்டாங்குச்சிகளை பயன்படுத்தி கலை பொருட்கள் தயாரிப்பது குறித்து இரண்டு மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது. இலவசமாக நடைபெறும் பயிற்சி முகாமில், பயிற்சிக்கான உபகரணங்கள், பயிற்சி நாட்களில் உணவு, சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கும், பயிற்சியில் பங்கேற்கவும் சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலரை, 94434-33354 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.