மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
14-Jan-2025
ஊட்டி; நீலகிரி மாவட்டம், ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள ஸ்ரீ பவானீஸ்வரர், ஸ்ரீ நடராஜமூர்த்தி, சிவகாமி சுந்தரேஸ்வரி கோவிலில் ஆண்டு தோறும்,ஆருத்ரா தரிசன பெருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.நடப்பாண்டில், 113 ஆண்டு ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. விழாவில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்துடன் கூடிய, திருத்தேர் பவனியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். ஊட்டியின் முக்கிய சாலைகளில் திருவீதி உலா நடந்தது. பவனியின் போது, மத்திய பஸ ஸ்டாண்ட் பகுதியில் அமைந்துள்ள பாறைமுனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதில், தோடர் மக்களின் பிரார்த்தனை இடம் பெற்றது. தொடர்ந்து, மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்த திருத்தேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், தீபாராதனை காண்பிடிக்கப்பட்டது. அதன்பின், ஐந்துலாந்தர் பகுதியில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. இதனை உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
14-Jan-2025