உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் நலிந்த வயோதிக கலைஞர்களுக்கு உதவி தொகை

நீலகிரியில் நலிந்த வயோதிக கலைஞர்களுக்கு உதவி தொகை

ஊட்டி; நலிந்த வயோதிக நிலையில் வாழும் கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு,நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை மூலம், நலிந்த நிலையில் வாழும் வயோதிக கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு நலிந்த கலைஞர் நிதி உதவி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வரும் கலைஞர்கள் இயற்கை எய்தினால் அவருடைய மரபுரிமையரான மனைவி அல்லது கணவருக்கு இந்த நிதி உதவி மாற்றி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய் நிதி உதவி வீதம், அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.எனவே, அனைத்து வட்டங்களிலும் நலிந்த கலைஞர்கள், தங்கள் வாழும் வருவாய் கிராமத்தின் கீழ் வரும் கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தாரை நேரடியாக தொடர்பு கொண்டு, முழு விவரம் மற்றும் கலை தொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை