உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் நுகர்வோர் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கூடலுாரில் நுகர்வோர் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கூடலுார்; கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழில் பயிற்சி மையத்தில், நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு, முதல்வர் சாஜி ஜார்ஜ் தலைமை வகித்தார். தேயிலை வாரிய மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி பேசுகையில்,'' நாட்டில் மாதம் தோறும், 1,300 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், நாம் பயன்பாட்டுக்கு போக, 200 மில்லியன் கிலோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலை நம் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இப்பகுதியில் கலப்பட தேயிலை இருந்தால், அதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம்,'' என்றார்.கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியன் பேசுகையில்,''நாம், நீடித்த பயன்பாடு உள்ள பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தத் துாக்கி எறியும் பொருட்களை தவிர்க்க வேண்டும்,''என்றார்.நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் பேசுகையில், ''இளைஞர்கள் நல்ல நுகர்வோர்களாக, சமுதாய மாற்றத்தில் தங்கள் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். முகாமில், சரஸ் அறக்கட்டளை நிர்வாகி வசந்தகுமாரி, சமூக ஆர்வலர் ஹேமலதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை