உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரி; கோத்தகிரியில் வருவாய் துறை மற்றும் காவல்துறை சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கோத்தகிரி தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். தாலுகா அலுவலகத்தில் துவங்கிய பேரணி, பஸ் நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம் மற்றும் காந்தி மைதானம் வழியாக, மீண்டும் தாலுகா அலுவலகத்தை அடைந்தது. அதில், போதை பொருட்களின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. பதாகைகள் ஏந்தி, பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை