உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயில் இன்ஜின்களுக்கு ஆயுத பூஜை

மலை ரயில் இன்ஜின்களுக்கு ஆயுத பூஜை

குன்னுார்: நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில்வே பணிமனையில் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் சர்வதேச சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று காலை ரயில் நிலையத்தில் ஆயுத பூஜை போடப்பட்டது. தொடர்ந்து, குன்னூர் பணிமனையில் உள்ள, நுாற்றாண்டு பழமை வாய்ந்த இன்ஜின்களுக்கு பூஜைகள் போடப்பட்டன. மேலும், டிராலி, பராமரிப்பு இரும்பு உபகரணங்களுக்கும் பூஜைகள் போடப்பட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை