உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காந்தி சிலை அருகே வாகனங்கள் நிறுத்த தடை; தினமலர் செய்தி எதிரொலி

காந்தி சிலை அருகே வாகனங்கள் நிறுத்த தடை; தினமலர் செய்தி எதிரொலி

ஊட்டி; ஊட்டி காந்தி சிலையின் அருகே சாலையில் வாகனங்களை 'பார்க்கிங்' செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி சேரிங்கிராஸ் ரவுண்டானா, நான்கு சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. நாள்தோறும், நூற்றுக்கணக்கான வாகனங்கள், இந்த சந்திப்பை கடந்து செல்கின்றன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காந்தி சிலையை ஒட்டிய சாலையில், சீசன் மற்றும் வார இறுதி நாட்களில் நெரிசலை கட்டுப்படுத்த சாலையில் தடுப்பு அமைத்து, ஆடம்ஸ் நீரூற்று வழியாக, வாகன செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். நெரிசல் இல்லாத நாட்களில் குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. சமீப காலமாக, இச்சாலையில் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டது. தவிர, காந்தி சிலை அருகே, இருச்சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான, 'பார்க்கிங்' தளமாக மாற்றப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், டிரைவர்கள் சிரமங்களை சந்தித்தனர்.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் வாகனங்கள் அகற்றப்பட்டு, இடையூறு இல்லாத போக்குவரத்துக்கு போலீசார் வழிவகை செய்துள்ளனர். இதனால், உள்ளூர் டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ