உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வங்கி மேலாளர் துாக்கிட்டு தற்கொலை

வங்கி மேலாளர் துாக்கிட்டு தற்கொலை

ஊட்டி: கடன் பிரச்னை காரணமாக, தனியார் நிதி நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடலுார் அருகே கரிய சோலை பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன், மணிகண்டன்,29, ஊட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். ஊட்டி ரோஸ் கார்டன் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்பில் மணிகண்டன் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று (நவ.,22) இரவு குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஊட்டி மத்திய போலீஸ் எஸ்.ஐ., நித்யானந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், ‘கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம்,’என, தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை