உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு; பாசுமதி நெல் விளைச்சல் அமோகம்

 ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு; பாசுமதி நெல் விளைச்சல் அமோகம்

கூடலுார்: கூடலுார் அருகே ஆடுதுறை இந்திய நெல் ஆராய்ச்சி மையத்தில், ஆய்வுக்காக பயிரிட்டுள்ள பாசுமதி நெல் அமோக விளைச்சல் கொடுத்திருப்பது ஆய்வாளர்களை வியக்க வைத்துள்ளது. கூடலுார் புளியாம்பாறையில், கோவை வேளாண் பல்கலைக்கழக, ஒட்டுநெல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் ஒரு பகுதியில், ஆடுதுறை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின், புதிய ரக நெல் கண்டுபிடிப்புகளை நடவு செய்து ஆய்வு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், புதிய கண்டுபிடிப்புக்கான நெல் வகைகள் நடவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பிட்ட சில நெல் வகைகள் வளர்ச்சி மற்றும் மகசூல் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு, கடந்த ஆக., மாதம் ஆடுதுறை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி ஜெயப்பிரகாஷ் மேற்பார்வையில் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மகேந்திரன், சியாம், குன்னுார் ஆராய்ச்சி மையத்தில் நெமடாலஜி (புழுக்கள் குறித்து ஆய்வு) பெர்லின் முன்னிலையில் ஆய்வு நிலையில் உள்ள நெல் ரகங்கள், விதை நெல்லுக்காக பாசுமதி போன்ற சில நெல் வகைகளையும் பயிரிட்டனர். இங்கு விளைச்சல் குறித்து ஆய்வுக்காக பயிரிட்ட பாசுமதி நெல் நன்றாக விளைச்சல் கண்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில், விவசாயிகள் பசுமதி நெல் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் உள்ள இப்பகுதியின் காலநிலை, புதிய வகை நெல் ஆராய்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. அதன் அடிப்படையில், ஆய்வுகளில் உள்ள நெல் நாற்றுகளை நடவு செய்து ஆய்வு செய்து வருகிறோம். மேலும், பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட சில நெல் ரகங்களில் இப்பகுதியில் விளைச்சல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். நடப்பு ஆண்டு இங்கு பயிரிடப்பட்ட பாசுமதி நெல், நல்ல விளைச்சல் கொடுத்துள்ளது. விவசாயிகள் இதனை பயிரிட்டு அதிகம் லாபம் ஈட்டலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ