உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடையை உடைத்த கரடி பொருட்கள் சேதம்

கடையை உடைத்த கரடி பொருட்கள் சேதம்

குன்னுார்; 'குன்னுார் பாலகிளவா பகுதியில், கடையை உடைத்து பொருட் களை துவம்சம் செய்த கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுாரில் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும், கரடிகள் கதவுகளை உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை சேதம் செய்து வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை குன்னுார் பாலகிளவா பகுதிக்கு வந்த கரடி, ஆஷா என்பவரின் கடை கதவு ஜன்னல் பலகைகளை உடைத்து உள்ளே சென்று, உணவு பொருட்களை சேதம் செய்தது. வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மக்கள் கூறுகையில்,'இந்த பகுதிகளில் உள்ள கடைகள், பள்ளி சத்துணவு கூடம் என, தொடர்ந்து உடைத்து சேதப்படுத்தி வரும் கரடியை, கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என், வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை