பகல் நேரத்தில் உலா வரும் கரடி : மக்கள் வெளியே நடமாட அச்சம்
குன்னுார்: குன்னுார் புரூக்லேண்ட் குடியிருப்பு பகுதிகளில் மாலை நேரத்தில் உலா வரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்லும் இந்த கரடிகள் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த உணவு பொருட்களை உட்கொண்டு வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 6:20 மணிளவில், புரூக் லேண்ட் கீழ் அட்டடி சாலையில், உலா வந்த கரடி, அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.அங்குள்ள தேன் கூடு, கலைத்துவிட்டது. இதனை பார்த்த பகுதி, மக்கள் அச்சமடைந்தனர். அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சி, அங்குள்ள கோல்டன் ஹில் எஸ்டேட் குடியிருப்பு சி.சி.டி.வி., கேமராவில் பதிவானது. நள்ளிரவில் மட்டுமே உலா வந்த கரடிகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருவதால் மக்கள் தனியாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
பலா ருசிக்க வரும் யானைகள்
குன்னுார்--மேட்டுப்பாளையம் மலைப்பாதை ஓரத்தில் குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று புதுக்காடு அருகே குட்டியுடன் நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அங்குள்ள பலா மரங்களில் கால்வைத்து, பலாப்பழங்களை பறித்து ருசித்தது. இதனை அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் கண்டுரசித்து புகைப்படம் 'வீடியோ' எடுத்தனர். வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.