காலையில் பள்ளிக்கு கரடி விசிட்; தனியாக செல்ல மாணவர்களுக்கு தடை
குன்னுார் : குன்னுார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கரடியால் ஆசிரியர்கள் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுார் பகுதிகளில், உணவு மற்றும் தண்ணீருக்காக கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர் பகுதிக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 7:20 மணியளவில் குன்னூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் கரடி உள்ளே நுழைந்தது. இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தது.வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து கரடி வேறு இடம் சென்றதால் மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், பள்ளியை விட்டு வெளியே தனியாக யாரும் செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.