மேலும் செய்திகள்
பகலில் உலா வரும் கரடி; மக்கள் நடமாட அச்சம்
18-Jul-2025
கரடி நடமாட்டம்; மக்கள் அச்சம்
21-Jul-2025
குன்னுார்; குன்னுார் சேலாஸ் கீழ் பாரதி நகர் பகுதியில் தேன் கூடு தேடி மரம் ஏறிய கரடிகள் கீழே இறங்கியதை கண்ட மக்கள் ஆச்சரியப்பட்டனர். குன்னுார் பகுதிகளில் இரவில் மட்டுமே உலா வந்த கரடிகள் தற்போது பகலிலும் உலா வருகின்றன. இந்நிலையில், குன்னுார் சேலாஸ் அருகே கீழ் பாரதி நகரில் மரத்தில் தேன் கூடு தேடி, இரு கரடிகள் மரததின் மீது ஏறியுள்ளது. அங்கு செடிகள் உடைந்து கீழே விழுவதை கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மரம் ஏறிய கரடிகள், அழகாக கீழே இறங்கியதை கண்டு மக்கள் ஆச்சர்யப்பட்டனர். இந்த 'வீடியோ' வைரலாகி வருகிறது.
18-Jul-2025
21-Jul-2025