உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பலி

மின்சாரம் பாய்ந்து காட்டெருமை பலி

கூடலுார்: கூடலுார் ஓவேலி அருகே அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி வனச்சரகம் பார்வுட் 'கிளன்வென்ஸ்' தனியார் எஸ்டேட்டில் காட்டெருமை இறந்து கிடப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், ஓவேலி வனச்சரகர் கருப்பு மற்றும் வன ஊழியர்கள் உடலை ஆய்வு செய்தனர். விசாரணையில், அறுந்து விழுந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழந்தது தெரியவந்தது. அதன் உடலை, முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'ஆய்வக பரிசோதனைக்கு உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின் உயிரிழப்புக்கு வேறு காரணம் இருப்பின் விசாரணை நடத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை