பூத்து குலுங்கும் மலர்கள்
ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கோடை சீசன் முடிந்த நிலையில், இரண்டாவது சீசன் செப்., மாதம் துவங்குகிறது. இரண்டாவது சீசனுக்கு பூங்காவை தயார்படுத்த மலர்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு நாற்றுகள் நடவு பணி, பூங்கா பராமரிப்பு பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணியர் பூங்காவை ரசிக்கும் வகையில் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் 'பிக்கோனியம், ஆர்கிட்' உள்ளிட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் மலர்கள் அருகே நின்று செல்பி, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.