உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாம்பெக்ஸ் 2024 ஸ்டாம்ப் கண்காட்சி

பாம்பெக்ஸ் 2024 ஸ்டாம்ப் கண்காட்சி

பாலக்காடு : பாலக்காடு மற்றும் ஒற்றப்பாலம் பிரிவு தபால் துறை ஒருங்கிணைந்து, 'பாம்பெக்ஸ் 2024' என்ற இரு நாட்கள் நடக்கும் ஸ்டாம்ப் கண்காட்சியை நேற்று துவங்கியது.கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் பார்வதி கல்யாண மண்டபத்தில், 'பாம்பெக்ஸ் 2024' என்ற இரு நாட்கள் நடக்கும் ஸ்டாம்ப் கண்காட்சியை, பி.எஸ்.என்.எல்., பாலக்காடு முதன்மை பொது மேலாளர் இளந்திரை துவக்கி வைத்தார். வடக்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சய்த் ரஷீத் தலைமை வகித்தார்.வடக்கு மண்டல தபால் இயக்குனர் கிரி, விக்டோரியா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தலைவர் ஸ்ரீவத்சன் ஆகியோர் பேசினர்.பாலக்காடு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் நாகாத்யாகுமார் வரவேற்று பேசினார். ஒற்றப்பாலம் பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் இந்திரா நன்றி கூறினார்.கண்காட்சியில், அரசு விக்டோரியா கல்லுாரியின் வரலாறு குறித்த புகைப்படங்களை, வடக்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், விக்டோரியா கல்லுாரி முதல்வர் பாபுராஜு வெளியிட்டனர்.கேரளாவில் உள்ள பிரபல தபால் தலை சேகரிப்பார்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்கால ஸ்டாம்ப்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ