உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எடப்பள்ளி நுாலகத்தில் புத்தக கண்காட்சி

எடப்பள்ளி நுாலகத்தில் புத்தக கண்காட்சி

கோத்தகிரி: கோத்தகிரி அருகே எடப்பள்ளி கிளை நுாலகத்தில், 59வது நுாலக வார விழாவின் ஒரு நிகழ்வாக, புத்தக கண்காட்சி நடந்தது. கிராம தலைவர் லிங்கன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட உறுப்பினர்கள் கிருஷ்ணன் மற்றும் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். எடப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, புத்தக கண்காட்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியில், புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு நாள்தோறும் வருகை புரிந்து, அறிவை வளர்த்து கொள்ள வலியுறுத்தப்பட்டது. நூலகத்திற்கு, 94வது புரவலராக காட்டேரி கிராமத்தைச் சேர்ந்த அசோக் குமார், 1,000 ரூபாய் வழங்கி தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு, நூலக வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில், வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நூலகர் ராமசந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ