புத்தக திருவிழா
கோத்தகிரி; தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கோத்தகிரி லயன்ஸ் கிளப் மற்றும் கிளை நுாலக வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து, இம்மாதம், 20 முதல், 24ம் தேதி வரை, கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 'கோத்தகிரி புத்தக திருவிழா -2025' என்ற புத்தக திருவிழாவை நடத்துகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.