சேற்றில் சிக்கிய பஸ்; பயணிகள் பாதிப்பு
பந்தலுார்; பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியான பாட்டவயல் பகுதியில் இருந்து கூடலுாருக்கு நேற்று மதியம் அரசு பஸ் சென்றுள்ளது. அப்போது, நெலாக்கோட்டை -தேவர்சோலை இடையே எட்டாவது மைல் என்ற இடத்தில், எதிரே வந்த கேரளா மாநில அரசு பஸ்சுக்கு இடம் கொடுத்த போது, தமிழக அரசு பஸ் சாலையோர சேற்றில் சிக்கியது. பஸ்சை எடுக்க முடியாத சூழலில் பஸ்சில் வந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர். நீண்டநேர முயற்சிக்கு பின்னர் பஸ் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.