மேலும் செய்திகள்
பிளஸ் 1 மாணவர்களுக்கு 'ஆன்லைனில்' வணிக கல்வி
09-Nov-2025
கூடலுார்: கூடலுார் தேயிலை வாரியம் சார்பில் நடந்த தேசிய வணிக தினத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு வணிக கல்வியின் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூடலுார் தேயிலை வாரியம் அலுவலகம் சார்பில், துப்புகுட்டி பேட்டை பகுதியில் உள்ள ஐடியல் பள்ளியில் தேசிய வணிக கல்வி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேயிலை வாரிய மேம்பாட்டு அதிகாரி அஞ்சலி, 'நாட்டின் வளர்ச்சியில் வணிக கல்வியின் முக்கியத்துவம்' குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், துாய்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் இடையே விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் துாய்மை குறித்து மாணவர்கள், அதிகாரிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் உசேன், மாணவர்கள் பங்கேற்றனர். மேம்பாட்டு அதிகாரி அனுபம்பெஸ்போரா நன்றி கூறினார்.
09-Nov-2025