உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அம்பிகாபுரத்தில் கரடியை பிடிக்க கூண்டு

அம்பிகாபுரத்தில் கரடியை பிடிக்க கூண்டு

குன்னுார்; குன்னுார் அம்பிகாபுரம் குடியிருப்பு அருகே புதர்களுக்குள் மறைந்திருக்கும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். குன்னுார் கரடிபள்ளம், அம்பிகாபுரம், ஓட்டுப்பட்டறை சுற்றுப்புற பகுதிகளில் கரடி நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், அம்பிகாபுரம் குடியிருப்பு அருகே புதர் செடிகளுக்குள் கரடி முகாமிட்டுள்ளது. இரவில் மட்டுமின்றி பகலிலும் கரடி உலா வருகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில், ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், பாரஸ்டர் ராஜ்குமார், கார்டுகள் திலிப், ராம்குமார் உட்பட வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை