உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கூண்டில் சிக்கிய புலி: முதுமலை வனத்தில் விடுவிப்பு

 கூண்டில் சிக்கிய புலி: முதுமலை வனத்தில் விடுவிப்பு

கூடலூர்: -கூடலூர், தேவர்சோலை அருகே, கூண்டில் சிக்கிய புலி, முதுமலையில் ஆண் புலி நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கூடலுார் அருகே, கொட்டாய் மட்டம் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில், நேற்று முன்தினம், புலி சிக்கியது. புலி ஏற்றப்பட்ட கூண்டை லாரியில் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். புலியை விடுவதற்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தை, கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மற்றும் முதுமலை வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கூண்டை திறந்து புலியை வனப்பகுதிக்குள் விடுவித்தனர். கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், 'கூடலூர் அருகே, பிடிபட்ட புலி, முதுமலை புலிகள் காப்பகம் எடுத்துச் செல்லப்பட்டு, வனத்தில் விடுவிக்கப்பட்டது. ஆண் புலி இருக்கும் பகுதியில், இதனை விடுவித்தால், வாழ்விடம் தொடர்பாக அவர்களுக்குள் மோதல் ஏற்படும் என்பதால், ஆண் புலி நடமாட்டம் இல்லாத பகுதியை ஏற்கனவே உறுதி செய்து, அப்பகுதியில் புலி விடுவிக்கப்பட்டது. இதை புலி தனக்கான வாழ்விடமாக மாற்றிக் கொள்ளும். மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை