உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி செக்யூரிட்டி கார்டுகளுக்கு அழைப்பு

 தீயணைப்பு நிலையங்களில் பயிற்சி செக்யூரிட்டி கார்டுகளுக்கு அழைப்பு

குன்னூர்: -நீலகிரி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், இன்று முதல் 10 நாட்களுக்கு, தனியார் பாதுகாவலர்களுக்கு, அடிப்படை தீயணைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் பாதுகாப்பு பணியாளர்கள் இரவு நேர பாதுகாவலர்கள் (செக்யூரிட்டி கார்டு) அடிப்படை தீயணைப்பு பயிற்சி அளிக்க தீயணைப்புத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில். ஊட்டி குன்னூர் கூடலூர் கோத்தகிரி தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்பு மையங்களில் இதற்கான பயிற்சி இன்று துவங்கி 10 நாட்களுக்கு காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம், அனைத்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை