மெழுகுவர்த்தி தயாரிப்பு பயிற்சி மகளிர் விண்ணப்பிக்க அழைப்பு
குன்னுார்: மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில், மாவட்டத்தை சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு மாத கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் கூறுகையில்,‘‘இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நறுமண மெழுகுவர்த்தி தயாரிப்பது குறித்த இப்பயிற்சியில், 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் பங்கேற்கலாம். இதில், மாநில அரசுகளின் மானிய கடன் திட்டங்கள் பற்றிய வழிகாட்டுதல்களும் கற்பிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை, 9976180670 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி முன்பதிவு செய்து பயன்பெறலாம்,’’ என்றார்