மேலும் செய்திகள்
மர்மவிலங்கு கடித்து 11 ஆடுகள் பலி
14-May-2025
குன்னுார்; ஊட்டிக்கு சுற்றுலா வந்த கார், நிறுத்தி வைத்திருந்த ஆட்டோக்கள் மீது மோதியதில், இருவர் காயமடைந்தனர்.சென்னையை சேர்ந்த கார்த்திக்,30, என்பவர் தனது மனைவியுடன் நேற்று காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். குன்னுார் பாய்ஸ் கம்பெனி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி வைத்திருந்த, ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோக்கள் சேதமாகின. ஆட்டோக்களில் அமர்ந்திருந்த சேகர், சுரேஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். அருவங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
14-May-2025