மேலும் செய்திகள்
புகார் பெட்டி குப்பை கழிவால் தொற்று நோய் அபாயம்
31-Dec-2024
கூடலுார்,; 'கூடலுார் துப்புகுட்டி பேட்டை பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதையும், போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதையும் தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலுார் நகரில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில், கடைக்காரர்கள் உதவியுடன், சிறு பூங்கா அமைத்து நகரை அழகு படுத்தி வருகிறது. மற்ற பகுதிகளில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க, அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். எனினும், சில பகுதிகளில் தொடர்ந்து திறந்த வெளியில் குப்பை கொட்டி வருகின்றனர்.இந்நிலையில், கூடலுார் கோழிக்கோடு சாலை, துப்புகுட்டிபேட்டை நிழல் குடை அருகே, நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வைத்துள்ள நிலையிலும், தொடர்ந்து சிலர் திறந்தவெளியில் குப்பை கொட்டி வருகின்றனர். அதில், உணவு தேடி ஆடுகள் முகாமிடுகின்றன. இதனால், சுகாதாரம் பாதிப்பதுடன், கால்நடைகளால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது. நிகற்குடையிலும் நிற்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுார் புற நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டுப்படுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. சாலையில் உலாவரும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனையும் தடுக்க வேண்டும்,' என்றனர்.
31-Dec-2024