உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சமுதாய கல்லுாரியில் பயின்ற 145 மாணவிகளுக்கு சான்றிதழ்

சமுதாய கல்லுாரியில் பயின்ற 145 மாணவிகளுக்கு சான்றிதழ்

கூடலுார், : கூடலுாரில் சேவாலயா சமுதாய கல்லுாரியில், 'நர்சிங் அசிஸ்டன்ட், லேப் டெக்னீசியன்' தையல் பயிற்சி முடித்த, 145 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.கூடலுார் சேவாலயா சமுதாய கல்லுாரியில், நர்சிங் அசிஸ்டன்ட், லேப் டெக்னீசியன், தையல் பயிற்சி முடித்த, 145 மாணவிகளுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை வகித்தார். பயிற்சி முடித்த மாணவிகளுக்கு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சி கழக நிறுவனத்தின் இயக்குனர் சபிதா போஜன், கூடலுார் நகராட்சி கவுன்சிலர் வர்கீஸ் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேவாலயா ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி