உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்

பந்தலுார்:பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில் நடந்த மாரத் தான் போட்டியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சேரம்பாடி வெண்ட்வொர்த் எஸ்டேட்டில் வேலை செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களை ஒருங்கிணைத்து,'நியூ பேமிலி குரூப்' அமைப்பு துவக்கப்பட்டது. ஓய்வு பெற்று தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் குடியிருந்து வரும், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதில் ஒன்றிணைத்துள்ளன. அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளை ஊக்குவிக்க மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சேரம்பாடி சோலாடி பகுதியில் இருந்து, சுங்கம் பகுதி வரை நடந்த இந்த போட்டியை, ஒருங்கிணைப் பாளர் பாத்திமா, தலைமை காவலர் பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். அதில், முகமதுபாதில் முதல் இடத்தையும், லக்சன் இரண்டாம் இடம், அஸ்வின் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை