உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஊட்டி : இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி இளம்பெண்ணிடம், 15 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஊட்டியை சேர்ந்த, 28 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் வேலை உள்ளதா என்று பார்த்து வந்தார். கடந்த, ஜூலை, 25ம் தேதி 'வாட்ஸ் ஆப்' மூலம் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. வேலைவாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் ஓட்டல் முன்பதிவு சம்பந்தமாக அவருக்கு வேலை கொடுக்கப்பட்டது.சில நாட்கள் கழித்து குறிப்பிட்ட தொகை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகவும், இதேபோல் பலருக்கும் லாபம் கொடுத்துள்ளதாகவும் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

ரூ.15 லட்சம் மோசடி

ஆரம்பத்தில் சிறிய தொகையை அந்த இளம்பெண் முதலீடு செய்து பார்த்தார். அதற்கு அவருக்கு இரட்டிப்பு பணம் வந்துள்ளது. இதனால் ஆசைப்பட்ட அவர் பல்வேறு தவணைகளாக, 15.39 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கவில்லை. அதேபோல் முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த அவர் இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.இதேபோல், ஊட்டியை சேர்ந்த ஒருவரிடம் பங்குச்சந்தை வர்த்தகம் என்று கூறி, 'தனியார் செயலியில் முதலீடு செய்தால் லாபம் வரும்,' என்று ஆசை வார்த்தை காட்டி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இந்த இரண்டு புகார்கள் குறித்து, ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீனா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை