உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / துாய்மை பள்ளி இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

துாய்மை பள்ளி இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோத்தகிரி, ; கோத்தகிரி ஒர சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், துாய்மை பள்ளி இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி பெரியசாமி மற்றும் கவுன்சிலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், பள்ளி வளாகம், சுவர்கள் மற்றும் கழிவறை துாய்மை செய்யப்பட்டன. தொடர்ந்து, பிளாஸ்டிக் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு சேகரித்த மட்கும் குப்பைகள் மற்றும் மட்காத குப்பைகள் நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. அனைவருக்கும், துணிப்பைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை