மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
கோத்தகிரி; கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் (டயட்), காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். 'டயட்' நிறுவன முதல்வர் முனிவர் சேகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசியதாவது: நம் நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி போன்ற எரிபொருட்கள், 150 ஆண்டுகளில் மிக அதிக அளவில் பயன்படுத்தியதன் விளைவாக, 'கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு' போன்றவற்றை, பூமியின் தங்கும் திறனை விட, மிக அதிக அளவில் வெளிப்படுத்தியதின் காரணமாக, வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, புவி வெப்பம், ஒரு டிகிரிக்கு மேல் அதிகரித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், பூமியின் வெப்பம், 1.41 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் அதிகரித்துள்ளது. அதில், '1.5 டிகிரி சென்டிகிரேட் மேல் பூமியின் வெப்பநிலை உயர்ந்தால், காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும்,' என, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில், பூமியின் சராசரி வெப்பநிலை, 1.64 டிகிரி வரை பதிவு செய்யப்பட்டது. இதனால், உத்தரகாண்ட், காஷ்மீர் மற்றும் மும்பை போன்ற பல நகரங்களில், வெள்ளம் மற்றும் பேரிடர் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. வரும், 2050ல் புவி வெப்பநிலை, 2 டிகிரி சென்டிகிரேட் அதிகரிக்கும் என எதிர்பார்த்து கொள்கிறது. 'அந்த வெப்பநிலையால், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி, பெருமளவில் பாதிக்கப்படும்,' என, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சமீபத்தில், கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதாகவும், அதன் விளைவாக கடற்கரையோர நகரங்கள் குறைந்தபட்சம், 10 கி.மீ., துாரம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதனை எதிர்கொள்ளும் வகையில், மாநில அரசு கல்வித்துறை வாயிலாக, பள்ளி மற்றும் பொது இடங்களில் மரம் நடவு செய்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு ராஜீ பேசினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. உதவி ஆசிரியர் சரவணகுமார் வரவேற்றார். ஆசிரியர் ரூபி நன்றி கூறினார்.
05-Sep-2025