உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலையில் மேகமூட்டம் : குன்னுார் காலநிலையில் மாற்றம்

காலையில் மேகமூட்டம் : குன்னுார் காலநிலையில் மாற்றம்

குன்னுார்: குன்னுாரில் காலையில் நிலவிய கடும் மேகமூட்டத்தை தொடர்ந்து, கனமழையும் நீடித்ததால்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.குன்னுார் கடந்த சில நாட்களாக வெயில், சாரல் மழை என மாறுபட்ட காலநிலை நிலவியது.இந்நிலையில், நேற்று காலை நகரப்பகுதிகளில் கடும் மேகமூட்டம் நிலவியது. இதனால், முகப்பு விளக்குகள் எரிய விட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடும் குளிரில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் இயற்கை காட்சிகள் ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து மதியத்தில் இருந்து கனமழை நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை