உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா

கோத்தகிரி: ஊட்டியில் கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், நீலகிரி மாவட்ட பிரிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில், 2023 - 24 ஆண்டில் தேர்ச்சி பெற்றுள்ள, 24 மாணவ, மாணவியருக்கு கூட்டுறவு பட்டய பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து, மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில்,''பயிற்சி முடித்த மாணவ, மாணவியர் அடுத்த நிலையாக, கூட்டுறவு சங்கங்களில் சேருவதற்கு தேர்வு எழுத நல்ல முறையில் பயில வேண்டும்,'' என்றார்.மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக துணை பதிவாளர் அய்யனார் முன்னிலை வகித்து பேசினார். 65 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பயிற்சி நிலைய பயிற்சியாளர் ராஜேஷ் வரவேற்றார். பயிற்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை