கூட்டுறவு தலைமை வங்கி புனரமைப்பு
ஊட்டி; ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி பொலிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், மாவட்ட முழுவதும், 22 கிளைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஊட்டி தலைமை வங்கியை பொலிவு படுத்த கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு வங்கி வெளிப்புறம் மற்றும் உட்பகுதிகளில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. தவிர, தனியார் வங்கிக்கு இணையாக முன் பகுதியில் கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. வங்கி பொலிவுப்படுத்தும் பணியால் வங்கி உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.