மேலும் செய்திகள்
நூறு நாள் திட்ட சமூக தணிக்கை துவங்கியது
10-Sep-2024
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் அவதி
11-Sep-2024
குன்னுார்: குன்னுார் பேரட்டி ஊராட்சியில், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, குன்னுார் ஊராட்சி ஒன்றியம், பேரட்டி ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், தணிக்கையாளர் சசி தலைமையில், பேரட்டி ஊராட்சி தலைவர் ஜெகதீஷ், துணை தலைவி சுகுணா, ஊராட்சி ஒன்றிய உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா முன்னிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடந்து முடிந்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி, தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. '100 நாள் வேலை பணியாளர்களுக்கு குளிர்கால ஆடை வழங்க வேண்டும்,' என, சமூக ஆர்வலர் ஆலம்மா வேண்டுகோள் விடுத்தார்.
10-Sep-2024
11-Sep-2024