உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் இரும்பு பாலம் பகுதியில் முட்டைகளை ருசி பார்த்த நாகப்பாம்பு

பந்தலுார் இரும்பு பாலம் பகுதியில் முட்டைகளை ருசி பார்த்த நாகப்பாம்பு

பந்தலுார்; பந்தலுார் அருகே இரும்புபாலம் பகுதியைசேர்ந்தவர் பாத்துமா. இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வரும் நிலையில் வீட்டின் பின்பகுதியில், கூண்டில் கோழியை அடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் கோழி கூண்டுக்குள் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தபோது, பெரிய நாகப்பாம்பு ஒன்று சீறிய நிலையில் இருந்துள்ளது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 9 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். கூண்டிற்குள் இருந்த கோழி பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்தது. அடை காக்க வைத்திருந்த, 16 முட்டைகளையும் பாம்பு உடைத்து குடித்துள்ளது. இதனால், வீட்டில் உள்ளவர்கள் அச்சம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி