8 கிலோ கஞ்சா பறிமுதல் கோவை பெண் கைது
கூடலுார்:கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற கோவை அன்வர் பாஷாவின் மனைவி முபீனாவை 45, தேனி மாவட்டம் கூடலுார் போலீசார் கைது செய்து 8 கிலோவை பறிமுதல் செய்தனர். கூடலுார் துர்க்கை அம்மன் கோயில் அருகே நேற்று தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் முபீனா பையுடன் நின்றிருந்தார். இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் இவரிடம் விசாரித்த போது பையில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.